சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்

0
459

சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஹிந்து அமைப்பினரும் ஆன்மீக அமைப்பினரும், ஹிந்துக்களும் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் இதுவரை தமிழக அரசு அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இது போன்றவர்களை ஊக்குவிக்கும் விதமாகவே செயல்பட்டு வருகின்றனர் தி.மு.கவினர். இந்நிலையில், அனைத்து சிவனடியார்கள் ஒன்றிணைப்பு குழு சார்பில், சிதம்பரத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன்  உள்ளிட்டவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்க தமிழகம், புதுவையில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் வந்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here