பீமபள்ளி ஜமாத் ஃபத்வா

0
2973

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பீமபள்ளி பகுதி தீவிர இஸ்லாமியவாதிகள் நிறைந்த பகுதிகளில் ஒன்று. இது கேரள காவல்துறையினர் நுழைய தடை விதிக்கப்பட்ட பகுதியாகும். அங்குள்ள மசூதியிலும் அதைச் சுற்றிலும் 28,000 தீவிரவாதிகள் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கடந்த காலங்களில், வணிகர்களை கொள்ளையடித்தல், கலவரங்கள் நிகழ்த்துதல் என பலமுறை தங்கள் உண்மையான நிறத்தைக் காட்டியுள்ளனர். என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், பீமாபள்ளி ஜமாத் மசூதி கமிட்டி தற்போது அங்குள்ள முஸ்லிம் அல்லாத வணிகர்களை எச்சரிக்கும் விதமாக ஒரு புதிய ஃபத்வா(தடை) விதித்துள்ளது. அதில், முஸ்லிம் அமைப்புகள் நடத்தும் ஊர்வலங்களுக்கு வணிகர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும், கடைகளை அடைக்க வேண்டும், போராட்டங்களில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும். மீறி கடைகளைத் திறந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘ராஜ்பவன் அணிவகுப்பு’ என்ற பேரணியை நடத்த பீமப்பள்ளி ஜமாத் திட்டமிட்டுள்ளது. “இந்த உத்திகள் பொருளாதார ஜிஹாத்தின் ஒரு பகுதியாகும், மேலும் கேரளாவில் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். இதுபோன்ற ஃபத்வாக்களை வெளியிட மசூதிகளை பயங்கரவாதிகள் மறைப்பாக பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தீய போக்குகளுக்கு திருவனந்தபுரம் வியாபார விவசாயி அமைப்பே காரணம். கேரளா வியாபாரி விவசாயி ஏகோபன சமிதி கோழிக்கோட்டை மையமாக கொண்ட ஒரு நிழலான அமைப்பு. இது கேரளாவின் மிகப்பெரிய வர்த்தகர் அமைப்பு. இது ‘மதச்சார்பற்ற’ என்றமுகமூடியை தனது செயல்பாடுகளுக்கு பயன்படுத்துகிறது” என அனந்தபுரி இந்து மகா சம்மேளன தலைவர் ஏ.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here