கோயில்கள் சேதம்

0
323

அசாம் மாநிலம் குவஹாத்தி நகரின் பேதபரா பகுதியில் உள்ள சிவன் கோயிலில் கடந்த மே 24 அன்று இரவில் புகுந்த சில மர்ம நபர்கள் அக்கோயிலில் உள்ள சிவன் சிலை, சிவலிங்கம் மற்றும் கோயில் சொத்துகளை சேதப்படுத்தினர். கோயிலில் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் உண்டியலில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அருகில் இருந்த ஒரு விநாயகர் கோயிலையும் அதில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையையும் சேதப்படுத்திச் சென்றனர். இதனை அறிந்த பக்தர்கள் காவல்துறைக்கு புகார் அளித்ததுடன் கோயில் சிலைகளை மீண்டும் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தினர். இப்படி ஒரே இரவில் இரண்டு கோயில்களை சேதப்படுத்தி கொள்ளையடித்து சென்றவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்து வரும் டி.சி.பி சுதாகர் சிங், விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here