பிரக்ஞானந்தாவுக்கு ஐ.ஓ.சியில் வேலை

0
3053

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மொத்தம் 9 தொடர்களாக நடந்த இந்த போட்டியில் 16 வயதான இளம் வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்றார். இதில், சீனாவின் வெய் யி, நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரி போன்றோரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, சீன வீரர் டிங் லிரனுடன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் இரண்டாம் இடம் பிடித்தார். இந்நிலையில் பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி) வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா, பணிக்கால அடிப்படையில் தனது 18வது வயதில் பணியில் சேர்வார் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here