உதயபூர் படுகொலை: VHP செயல் தலைவர் அலோக் குமார் கண்டனம்:

0
255

 உதய்பூரில், ஜன நெரிசல் மிகுந்த ஒரு சந்தையில், பட்டப்பகலில், ஜிகாதிகள், ஒரு நபரை கொன்று, அதை வீடியோவும் எடுத்துள்ளார்கள். அதன் பின்னர் அவர்கள் வெளியிட்ட வீடியோவில், கத்தியுடன் தோன்றி, பாரத பிரதமருக்கே மிரட்டல் விடுக்கிறார்கள்.

இது இந்தியாவின் இறையாண்மைக்கும், கருத்து சுதந்திரத்திற்கும், மத சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்டுள்ள சவால்.

விஸ்வ ஹிந்து பரிஷத்தும், நாட்டு மக்களும் , மத்திய அரசும் இந்த சவாலை ஏற்று, ஒன்றாக முறியடிப்போம். எந்த நெறிகள் நாட்டை முன்னேற்றியதோ, அதே நெறிகள் கொண்டு வெற்றி பெறுவோம்.

நுபுர் (ஷர்மா) மற்றும் நவீன் (ஜிண்டால்) இருவரின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது . அவர்களுக்கும், அவரகள் குடும்பங்களுக்கும் தீவிர பாதுகாப்பு அளிக்க அரசை கேட்டு கொள்கிறோம்.

பாரத் மாதா கீ ஜே

ஆலோக் குமார்
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here