3 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் பாயுது பி.எஸ்.எல்.வி.,- சி53

0
272

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சிங்கப்பூர் நாட்டிற்கு சொந்தமான டி.எஸ். – இ.ஓ. உட்பட மூன்று செயற்கைக் கோள்கள் பி.எஸ்.எல்.வி. – சி 53 ராக்கெட் வாயிலாக நாளை மாலை 6:00 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதற்கான 25 மணி நேர ‘கவுன்ட் டவுன்’ மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. சிங்கப்பூரை சேர்ந்த மூன்று செயற்கைக் கோள்களில் முதன்மையானதான டி.எஸ். – இ.ஒ. செயற்கைக் கோள் 365 கிலோ எடை உடையது.இது தெளிவாக வண்ண புகைப்படங்களை எடுக்கும் திறன் உடையது.அடுத்து 155 கிலோ எடை உடைய ‘நியூசர்’ செயற்கைக்கோள் இரவு பகல் என அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here