தமிழகத்தில் 150 அடி உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி

0
207

கன்னியாகுமரியில், 150 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி நேற்று முதல் பறக்க விடப்பட்டது. நான்கு வழி சாலையில், மகாதானபுரம் ரவுண்டானாவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது.அதில், 32 அடி உயரம், 48அடி நீளம் அகலம் கொண்ட தேசிய கொடியை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நேற்று ஏற்றினார். தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இரவு, பகல் 24 மணி நேரமும் இந்தக் கொடி பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவிலும் கொடியை பார்க்கும் வகையில் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here