கீதையை நாம் உலகிற்கு கொடுக்க வேண்டும். கீதையை புத்தக வடிவில் கொடுப்பதோடு அல்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் கற்றுக் கொடுக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் கீதையை உபதேசித்து அதன்படியே வாழ்ந்து காட்டினார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அதர்மமான வழிமுறையில் செல்வதை நிறுத்தி காட்டினார். அதனால் வரும் தடைகளை தூர விரட்டினார். ராஜா மற்றும் பிரஜைகளுக்கான உறவு எப்படி இருக்க வேண்டும் என்றும்
காட்டியுள்ளார். இவையெல்லாம் தம் வாழ்வில் கடைபிடித்து, பிறகு தான் அவர் உபதேசம் செய்தார். கர்ம யோகம், பக்தி யோகம், ராஜயோகம் இந்த எல்லா யோகங்களையும் தன் வாழ்விலே கடைப்பிடித்தார். கீதையை நாம் நம் வாழ்வில் கொண்டு வந்து சமூக மற்றும் உலகளாவிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும். டாக்டர். மோகன் பகவத் ஆர். எஸ். எஸ் தலைவர்