ஒடிசாவின் புனிதமான நகரான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா என்கிற பலராமர்ஆகிய மூன்று ரதங்களும் தயார் செய்யப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன. உரிய பூஜைகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஸ்ரீஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது. இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்து இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்கிறது. ரத யாத்திரையில் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர்.