20 சதவீத பெண் அக்னி வீரர்கள்

0
182

இந்திய கடற்படை தான் இதுவரை பெற்ற விண்ணப்பங்களில் ஏற்கத்தக்க தகுதியுள்ளவற்றில் 20 சதவீதம் பெண்களுடையது என்று தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்வாகும் 20 சதவீத பெண் அக்னி வீரர்கள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்படை தளங்களுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள். அவர்கள், ஆர்டினன்ஸ், எலக்ட்ரிக்கல், நேவல் ஏர் மெக்கானிக்ஸ், தொலைதொடர்பு செயல்பாடு, எலக்ட்ரானிக் வார்ஃபேர், கன்னரி வெப்பஸ், சென்சார்ஸ் என பலதுறைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள். அக்னி பாதை திட்டமானது பாலின சமத்துவத்துடன் செயல்படுத்தப்படும். மேலும், முதன்முறையாக போர்க்கப்பல்களில் மாலுமிகளாகவும் பணியமர்த்தப்படுவார்கள் என்று கடற்படை தெரிவித்துள்ளது. தற்போது இந்திய கடற்படையில் முன்னணி போர்க்கப்பல்களில் 30 பெண் உயர் அதிகாரிகள் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர் என்பது சிறப்பானது. அதேபோல் விமானப்படையில் சேர இதுவரை 2.7 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த திட்டத்திற்கு சில பிரிவினைவாதிகள், அரசியல்வாதிகளின் சதித் திட்டம் மற்றும் தூண்டுதலால் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், ஆள்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதும் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தில் சேர விண்ணப்பித்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். விரைவில் முதல் பேட்ச் ஆள்சேர்ப்பு விரைவில் முடிந்து பயிற்சி ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here