அமித்ஷாவை சந்தித்த என்.ஐ.ஏ தலைவர்

0
230

ராஜஸ்தானின் உதய்பூரில் கன்னையா லால் மற்றும் மகாராஷ்டிராவின் அமராவதியில் உமேஷ் கோல்ஹே என்ற இரு அப்பாவி ஹிந்துக்களை; முஸ்லிம் பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க (என்.ஐ.ஏ) மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இவ்வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விலக்கமளிக்க, என்.ஐ.ஏ தலைவர் தினகர் குப்தா மத்திய உள்துறை அலுவலகம் சென்றார். அங்கு அவர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். கடந்த வியாழனன்று, இந்த இரண்டு கொடூர கொலைகளிலும் பயங்கரவாத கும்பலின் பங்கு இருக்கலாம் என சந்தேகிப்பதாக என்.ஐ.ஏ கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here