திருமயம் அருகில் உயிருக்குப்போராடிய பசுங்கன்றை காப்பாற்றிய ஆர்எஸ்எஸ் தொண்டர்

0
201

திருமயம் _ காரைக்குடி பைபாஸ் ரோடில் ஆவுடைப் பொய்கை அருகே மினிலாரியில் அடிபட்டு காயங்களுடன் பசுங்கன்று ஒன்று உயிருக்குப்போராடியுள்ளது. அவ்வழியில் பயங்கரமான போக்குவரத்து இருந்தும் ஒருவர் கூட அங்கே நிற்கவில்லை.

இந்நிலையில் அதன் வழியே காரில் வந்த ஆர்எஸ்எஸ் அமைப்பாளர் சந்திரசேகர் தனது காரை ஓரமாக நிறுத்தி விட்டு பசுங்கன்றை அப்பகுதி மக்கள் ஒத்துழைப்புடன் சாலையோரம் தூக்கி வந்து படுக்க வைத்து, தனது துண்டை மாட்டின் தலை தரையில் படாமல் இருக்க விரித்து அதற்கு குடிநீர் வழங்கினார். பின்னர் அவர் காரைக்குடி காவல்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, அந்த பசுங்கன்றிற்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அவரது மனிதாபிமான இச்செயலை கிராம மக்கள் பாராட்டினர். இந்த நிகழ்வு சமூக வலைத்தளஙகளில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here