அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP ) முசிறி நகர பயிற்சி முகாம்

0
167

தேசிய மாணவர் அமைப்பு முசிறி நகர கிளை சார்பாக 10/07/2022, ஞாயிற்றுக்கிழமை முசிறி ஜெயந்திரா வித்யாலயா பள்ளியில் ABVP நகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 30- க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் மாணவர் விஜய ராகவன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் திரு.வடிவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.ABVP அறிமுகம் மற்றும் சாதனை குறித்து உரை இருந்தது. தேசிய சிந்தனையில் மாணவர்களின் பங்கு என்பது குறித்து ஆசிரியை. சரோஜினி அவர்கள் உரையாற்றினார். பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியாக இந்த ஆண்டிற்கான முசிறி நகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ABVP முசிறி நகர தலைவராக திரு. வடிவேல் அவர்களும் நகர ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ. விஜயராகவன் அவர்களும் மற்றும் நகர செயலாளராக ஸ்ரீ. வீரப்பன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here