நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா

0
227

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பூங்கோயில் சப்பரம், வெள்ளிச்சப்பரம், கற்பக விருட்ச வாகனம், வெள்ளிக்கமலம், தங்க பூதம், சிம்மம், வெள்ளி குதிரை, வெள்ளி ரிஷபம், இந்திர விமானம், வெள்ளி சப்பரம், பல்லக்கு, வெள்ளி காமதேனு வாகனங்களில் சுவாமி-அம்பாள் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்து வந்தனர். தேரோட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here