ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ‘இன்டர்போல்’ சர்வதேச போலீஸ் அமைப்பு, வலைதளத்தில் சிறார்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் குற்றங்களை கண்டுபிடிக்கவும், அது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட நாடுகளிடம் பகிரவும் தனி பிரிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
இந்தியாவில், 2017 – 20 வரையிலான மூன்று ஆண்டுகளில், 24 லட்சத்திற்கும் அதிகமான இணைய வழி சிறார் பாலியல் கொடுமைகள் நடந்துள்ளன. இவற்றில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், 14 வயதிற்கு உட்பட்ட சிறார்கள். இனி, இத்தகைய குற்றத் தகவல்கள் கிடைக்கும் என்பதால், குற்றவாளிகளை விரைந்துபிடிக்க முடியும்.