நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனபின்பும் சுத்தமான தண்ணீர் கிடைக்காத கிராமங்கள் பல்லாயிரக் கணக்கில் உள்ளன.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் வழியாக சுத்திகரிக் கப்பட்ட தண்ணீர் வழங்கிட திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றன.
கடல் மட்டத்திலிருந்து 13500 அடி உயரத்தில் இருக்கும் லடாக் யூனியன் பிரதேசத்தில் டேம்சொக்கில் வீடுகளுக்கு குழாய் வழியாக தண்ணீர் கிடைத்திட இணைப்பு கொடுக்கப்பட் டுள்ளது.
வாழ்நாளில் முதல் தடவை குழாய் வழியாக வீடுகளுக்கு தண்ணீர் வருவதைக் கண்டு அக்கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அங்குள்ள தட்பவெப்ப சூழலில் தண்ணீர் உறைந்து ஐஸ் கட்டியாகி விடும். அதை தடுப்பதற்காக 5 Solar Submersible Pumps பொருத்தப்பட்டு தகுந்த பாதுகாப்புப்புள்ள குழாய் 325 கி.மீ. பதிக்கப்பட்டுள்ளது.
பாரதத்தில் மிகக் குறைந்த மழை பொழியும் இடம் லடாக். எப்போதும் உறை பனி சூழல் நிலவும் இடம். அடிப்படை வசதி இல்லாமல் மக்கள் பெரும் துன்பத்தில் இருந்து வந்தனர். காஷ்மீரில் இருந்த அப்துல்லா அரசு லடாக் மக்களைப் பற்றி சிறிது கூட அக்கறையில்லாமல் இருந்தனர்.
மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அரசியல் சட்டம் 370 நீக்கப்பட்ட பிறகு தான் அப்பகுதியில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகம், சாலைகள் & மின்சார இணைப்பு வசதிகள் சாதாரண மக்களுக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.