திருநெல்வேலி மாவட்டத்தின், கலெக்டராகவும், நீதிபதியாகவும் ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் டிஸ்கவர் ஆஷ் இருந்தவர். சுதந்திரம் வேண்டி போராடும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கியவர். அப்பாவி மக்கள் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தவர்.கொடூரமான ஒடுக்குமுறைகளை திணித்தவன்,சுதந்திரம் வேண்டி போராடிய வ.உ.சி.க்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியவர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உண்டு. இதன்காரணமாகவே, ஆஷ்துரையை சுதந்திர போராட்ட தீபம் வாஞ்சிநாதன் சுட்டுக் கொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில், தூத்துக்குடி மாநகராட்சி ஆஷ்துரையின் நினைவிடத்தை பல லட்சம் ரூபாய் செலவில் மீண்டும் புதுப்பித்து வரும் சம்பவம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது. இதற்கு, அம்மாவட்ட மக்களையும் கடந்து தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன.