கடல் பகுதியை கண்காணிக்க இலங்கைக்கு டோர்னியர் விமானம் வழங்கியது இந்தியா

0
287

கொழும்பு சர்வதேச விமான நிலையத்தையொட்டி உள்ள இலங்கை விமானப்படை தளத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். இந்தியா சார்பில், இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மடே, கொழும்பில் உள்ள இந்திய தூதர் கோபால் பாக்லே பங்கேற்றனர். ‘பரஸ்பர புரிதல், நம்பிக்கை, ஒத்துழைப்பால் இந்திய-இலங்கை பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு புதிய பங்களிப்பாக, தற்போது இந்தியா வழங்கும் டோர்னியர் விமானம் அமைந்திருக்கிறது’ என்று கோபால் பாக்லே கூறினார். இந்த விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியையும் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினருக்கு இந்தியா வழங்கியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here