சீன வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா

0
160

சாரிட்டி கோப்பை விரைவு செஸ் போட்டித் தொடர் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இதில், பாரதத்தின் விதித் சந்தோஷ், பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா நார்வேயின் கார்ல்சன் உட்பட 16 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டித் தொடரின் 8வது சுற்றில் தமிழகத்தின் இளம் செஸ் நட்சத்திரமான 16 வயது பிரக்ஞானந்தா, உலகின் 3ம் இடத்தில் இருக்கும் சீன வீரர் டிங் லிரேன் விளையாடினர். இந்த ஆட்டத்தில் சீன வீரர் டிங் லிரேன் வெள்ளைக் காய்களுடன் ஆட, பிரக்ஞானந்தா கருப்புக் காய்களை நகர்த்தினார். இதில் 49வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். சமீபத்தில்தான் பிரக்ஞானந்தா உலக சாம்பியன், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகைவே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here