நாட்டிற்கான பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளதால் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன் வழங்க வேண்டாம் – என்.ஐ.ஏ.

0
227

தங்க கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என என்.ஐ.ஏ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் மூலம் கிலோ கணக்கில் தங்க கடத்தல் நடந்த விவகாரம் கடந்த ஆண்டு வெட்ட வெளிச்சமானது. இந்த வழக்கில், துாதரக முன்னாள் ஊழியரான ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தேசியப் புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரிக்கின்றன. ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சிவசங்கர் கடந்த பிப்ரவரி மாதம் ஜாமின் பெற்றார். ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட மற்றவர்கள் ஓராண்டாக சிறையில் உள்ளனர்.

தற்போது ஸ்வப்னா ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார். அதற்கு என்.ஐ.ஏ., தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் கூறியதாவது: எங்கள் விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டோர் பெரிய அளவில் இந்தியாவுக்குள் தங்கம் கடத்துவது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுற்றுத்தல் ஏற்படுத்தும் என என்பதை நிறுவியுள்ளோம். இது பயங்கரவாத செயலாகும். அதற்காக அவர்கள் கூட்டு சதி செய்தனர், ஆட்களைச் சேர்த்தனர், ஒரு பயங்கரவாதக் குழுவை உருவாக்கினர், நிதி திரட்டினர். யுஏஇ-யிலிருந்து 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை 167 கிலோ தங்கத்தை கடத்தியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்வப்னா சுரேஷ் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை ஜாமினில் விடுவிப்பது விசாரணையை தீவிரமாகத் தடுக்கும். ஸ்வப்னா சுரேஷுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய இடங்களில் தொடர்புகள் உள்ளன. அதனால் ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களை மாற்றவும் வாய்ப்புண்டு என கூறி ஜாமீன் வழங்க வேண்டாம் என வேண்டியுள்ளது என்.ஐ.ஏ அமைப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here