மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், ‘பாரதத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 2016ல் 471 ஆக இருந்த நிலையில் அது, 2022ல் 72,993 ஆக உயர்ந்துள்ளது. 4,500க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட் அப்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பவை நாட்டிற்கான வளர்ச்சிக்கான இயந்திரங்கள். இந்த அம்சத்தை கருத்தில்கொண்டு, நமது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கவும், தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கவும் பாரதத்தின் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை வளர்க்கும் ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியை மத்திய அரசு 16 ஜனவரி 2016 அன்று தொடங்கியது. தொழில்முனைவோர் இன் ரெசிடென்ஸ் (EIR) திட்டத்தின் மூலம் தொழில்முனைவோராக முயலும் மாணவர்களுக்கு பெல்லோஷிப்களை வழங்குதல், இளம் மற்றும் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப்கள் (PRAYAS) திட்டத்தின் மூலம் யோசனைகளை முன்மாதிரிகளாக மாற்றுவதற்கான நிதி உதவி, முதல் முயற்சிகளுக்கு ஆரம்ப நிலை ஆதரவு, ஆக்ஸிலரேட்டர்கள் மூலம் வழிகாட்டுதல், முதலீட்டுத் தயார்நிலை, அடல் இன்னோவேஷன் மிஷன், சிறப்பு மையங்கள், மானியங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன’ என தெரிவித்தார்.