நாடு முழுவதும் 21 கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பசுமை விமான நிலையங்களில் இதுவரை 8 விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. இதைத்தவிர, ராஜஸ்தானின் ஆல்வார், மத்தியப் பிரதேசத்தின் சிங்ராலி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி ஆகிய இடங்களில் மூன்று கிரீன்ஃபீல்ட் விமான நிலையங்களை நிர்மாணிப்பதற்கான முதல் கட்ட அனுமதியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. நாட்டில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை உருவாக்குவதற்கான நடைமுறை மற்றும் நிபந்தனைகளை பரிந்துரைக்கும் கிரீன்ஃபீல்ட் விமான நிலையக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது என கூறிய மத்திய இணையமைச்சர் வி.கே சிங், அந்தச் கொள்கைகளையும் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தார்.