ஸ்வயம்சேவகரை கொன்ற கம்யூனிச குண்டர்கள்

0
239

கேரள மாநிலம் கண்ணூர் குத்துபரம்பவில் உள்ள பானுண்டா பகுதியில், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) ஏற்பாடு செய்திருந்த குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஜிம்னேஷ் மற்றும் பிற ஸ்வயம்சேவகர்களை ஆளும் இடதுசாரி கட்சியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குண்டர்கள் குழு கொடூரமாக தாக்கியது. இத்தாக்குதலில் ஏ. ஆதர்ஷ், பி.வி ஜிஷ்ணு, டி. அக்ஷய், கே.பி ஆதர்ஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தலச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பனுன்டா பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஜிம்னேஷ் சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், இத்தாக்குதலில் காயமடைந்த டி. அக்ஷயின் பினராயி கிராமத்தில் உள்ள வீடு உள்ளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சி.பி.எம்) ரௌடிகளால் தாக்கப்பட்டது. குருதட்சிணை விழாவுக்காகத் தயார் செய்யப்பட்டிருந்த கொடிகள் மற்றும் இதர அலங்காரங்களை அவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here