சிஆர்பிஎப் தினம்: பிரதமர் வாழ்த்து

0
163

மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
1939-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சிஆா்பிஎஃப் தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய மத்திய காவல் படையாக உள்ள சிஆா்பிஎஃப், தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் சிஆா்பிஎஃப் தொடக்க தினத்தையொட்டி, அந்தப் படையினருக்குப் பிரதமா் மோடி ட்விட்டரில் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
தனது தளராத தைரியம் மற்றும் பிரத்யேக சேவையால் தனித்துவம் வாய்ந்த படையாக சிஆா்பிஎஃப் திகழ்கிறது. பாதுகாப்பு சவால்கள், மனிதநேயம் சாா்ந்த பணிகள் என எதுவாக இருந்தாலும் சிஆா்பிஎஃப்பின் பங்கு பாராட்டுக்குரியதாக உள்ளது என்று தெரிவித்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here