சமூக ஊடகக் கணக்குகள் சரிபார்ப்பு கட்டாயம்

0
52
சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம்.அதே வேளையில், பொறுப்பற்ற நிலையில் பொதுத்தளத்தில் சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் சட்டத்தின்படி தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.இதனை உறுதிசெய்வதற்கு தகவல் தொழில்நுட்பம் விதிகள், 2021 நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு வெளிப்படையான, பாதுகாப்பான நம்பத்தகுந்த சமூக ஊடகக் கணக்குகள் இருக்க வேண்டும் என்பதை அரசு முனைப்போடு செயல்பட்டு அதற்கு செயலாக்கம் தரும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 கொண்டு வரப்பட்டது. அதில், (i) பகிரப்படும் தகவல்கள் அறிந்தோ, அறியாமலோ, தகவல்களை பெறுபவர்களை ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ, காட்சிப்படுத்தவோ, பதிவேற்றவோ, மாற்றவோ, வெளியிடவோ, அனுப்பவோ, சேமிக்கவோ, புதுப்பிக்கவோ அல்லது பகிரவோக் கூடாது. பொய்யான, தவறாக வழிநடத்தும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். (ii) மேற்கூறியவற்றை மீறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட அரசு அல்லது அதன் அமைப்பு ரீதியிலான புகார் அல்லது நீதிமன்ற உத்தரவு அல்லது நோட்டீஸ் பெறப்பட்டதன் பேரில் தானாக முன்வந்து, தகவல்களை பகிரவோ, சேமிக்கவோ அல்லது வெளியிடவோக் கூடாது. அவதூறு, பொது மக்கள் நலன், கண்ணியம், ஒழுக்கம், மீறப்படும் போது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள். (iii) சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க நிறுவனத்திடமிருந்து உத்தரவு கிடைத்தவுடன், சட்டத்தின் கீழ் தடுப்பு, கண்டறிதல், விசாரணை அல்லது வழக்குத் தொடர தகவல் அல்லது உதவி வழங்கப்படும். (iv) இது சம்பந்தமாக புகாரளித்த 72 மணி நேரத்திற்குள் தீர்க்க வேண்டும். இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here