போதைப் பொருள் தடுப்பு பிரிவு : உள்துறை அமைச்சகத்துக்கு மாற்ற வாய்ப்பு

0
151

போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், இந்தப் பிரிவை, உள்துறை அமைச்சகத்தின் கீழ் மாற்ற வேண்டும் என, பா.ஜ., மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவை நிதி அமைச்சகத்தில் இருந்து உள்துறை அமைச்சகத்துக்கு மாற்றுவது தொடர்பாக பேச்சு நடந்து வருவது, முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான கோப்புகள், கேபினட் செயலர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here