அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை

0
124

அண்ணா பல்கலைகழகத்திற்கு 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தடைந்தார். சென்னை, 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி, செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் உள்ளிட்டோர் வந்தனர். பிரதமர் மோடி வருகையால் பல்கலைக்கழகம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகள், 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here