நீட் தேர்வு பற்றி சூர்யாவின் கருத்துக்கு எதிர்ப்பு சமூக வலைத்தளத்தில் நெட்டிசங்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1
186

நீட் தேர்தல் விஷயத்தில் மாணவர்களை குழப்பும் அரசியவாதிகள் மத்தியில் சில பிரபலங்களும் மாணவர்களை குழப்பி வருகின்றனர்.

பாரத தேசம் முழுக்க மருத்துவர் தகுதி தேர்வுக்கு நீட் என்ற நுழைவு தேர்வு நடத்த திட்டமிட்டு சில வருடங்களாக நடத்தி வருகிறது அரசு. தேர்விற்காக மாணவர்களும் தயாராகி வருகின்றனர். ஆனால் தமிழக ஆளுங்கட்சியினர் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மாணவர்களை குழப்பி வருகின்றனர். அதனால் விழி பிதுங்கி உள்ளனர். மாணவர்களை குழப்பும் அரசியவாதிகள் மத்தியில் சில பிரபலங்களும் மாணவர்களை குழப்பி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசால் ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை பற்றி விசாரிக்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் சூர்யா நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என சர்சைக்குரிய வகையில் தெரிவித்து உள்ளார்.

அதற்கு சமூக வலைத்தளத்தில் சூர்யாவை நெட்டிசங்கள் அரசியல் பினாமிகளை போல சினிமா கள்ளப்பணம் தயாரிப்பாளர்கள் தான் கல்வி கொள்ளையர்கள். எனவும் திறமை, மார்க் இருந்தும் காசில்லாமல் தன் கனவை இழந்த நம் குழந்தைகளின் வேதனை இவர்களுக்கு எப்படி புரியும் என பல விதமாக கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here