5 வயது (அனுசுயா கோஷ்) சிறுமியின் பரந்த உள்ளதைப் பாராட்டுவோம்

0
83

திரிபுராவில் யூ.கே.ஜி. படித்து வரும் 5 வயதான அனுசுயா கோஷ் தனது நீண்ட அழகிய முடியை தானமாகத் தந்துள்ளார். நாகபுரியில் கேன்சர் நோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிற 50 வயதான சங்கமித்ரா ஷாலிக்ராமிற்கு உதவிட முடி தானம் வழங்கியுள்ளார். சங்கமித்ரா ஷாலிக்ராமிற்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வருவதால் அவரது முடி அனைத்தும் கொட்டிவிட்டது. அவருக்கு (Hair Transplantation) மாற்று முடி பொறுத்த வேண்டி முடி வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள என்.ஜி.ஓ. அமைப்பு மேற்கொண்ட முயற்சி சமூக ஊடகங்களின் வழியாக திரிபுரா தலை நகர் அகர்தலாவில் வசித்து வருகிற கோஷ் குடும்பத்தினரை சென்றடைந்தது. சங்கமித்ராவின் துயரத்தை உணர்ந்த கோஷ் குடும்பத்தினர் தனது மகள் அனுசுயா கோஷின் அழகிய நீளமான தலை முடியை மிகக் கவனத்துடன் முறை யாகக் கத்தரித்து எடுத்து நாக்பூரில் சிகிச்சை பெற்று வரும் சங்கமித்ராவிற் காக அனுப்பி வைத்துள்ளனர். அனுசுயா கோஷின் தாய் சீமா சக்மா ஒரு பள்ளி ஆசிரியை. தன் மகள் தானாக முன்வந்து விருப்பத்துடன் முடி தானம் செய்துள்ளது தனக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அனுசுயா கோஷின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். நாமும் சிறுமி அனுசுயா கோஷின் உதவும் உள்ளதைப் பாராட்டுவோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here