ஐ.நாவில் பாரதம் குற்றச்சாட்டு

0
677

ஐக்கிய நாடுகள் பொது சபையில் பேசிய (ஐ.நாவி;ல்) பாரதத்திற்கான நிரந்தர தூதர் விதிஷா மைத்ரா, ‘ பாரதத்தின் உள்நாட்டிலும் எல்லை பகுதிகளிலும் வன்முறை கலாசாரத்தை தூண்டுகிறது பாகிஸ்தான். அதே நேரத்தில் பாரதத்திற்கு எதிராக வெறுப்பை பரப்ப ஐ.நா சபையை தவறாக பயன்படுத்த முயற்சி செய்கிறது. அதனை அனைவரும் அறிவோம். பாகிஸ்தானின் இத்தகைய முயற்சிகளை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. அதனை கண்டிக்கிறோம். சகிப்புத்தன்மையின்மை மற்றும் வன்முறையின் வெளிப்பாடாக பயங்கரவாதம் உள்ளது. இவை, மதங்கள், கலாசாரத்திற்கு எதிரானவை. மதத்தை பயன்படுத்தி இச்செயல்களுக்கு நியாயம் கற்பிக்கும் பயங்கரவாதிகளை குறித்தும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் குறித்தும் உலகம் கவலைப்பட வேண்டும்’ என்றார்.

Source by- Vijayabharatham Weekly

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here