75வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ABVP

0
13009

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பார்கள். மானிடப் பிறவியின் மகத்தான பருவம் மாணவப் பருவமாகும். செய்வதற்கு அறிய செயல்களை மிகச் சாதாரணமாக செய்து முடிக்கும் ஆற்றல் உள்ள பருவம் இந்த மாணவப் பருவம். சாதாரண மாணவர்கள் கூட அசாதாரணமான செயல்களை செய்வதை நாம் காண்கிறோம். இளங்கன்று பயம் அறியாது என்பதைப் போல சிறுவயதில் நாம் கற்றுக் கொள்பவை வாழ்நாள் முழுவதும் நமக்கு உதவுகின்றன. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள்.

உலக வரலாற்றில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் தங்களது மாணவப் பருவத்தை, இளமைப் பருவத்தை சரியாக முறையாக பயன்படுத்தியவர்கள் தான்.

பாரத தேச விடுதலைக்கு போராடியவர்களில் பெரும்பாலானோர் மாணவ இளைஞர்களே.
தமிழகத்து வீரவாஞ்சிநாதன் துவங்கி பகத்சிங் வரை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சுதந்திரம் பெற்ற பிறகு பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்பதற்காகவும் உலக அரங்கில் பாரத தேசத்தின் பெருமையை நிலைநாட்டிடவும் மாணவர்களது பங்களிப்பு இன்றியமையாதது என்பதை உணர்ந்த தேசிய சிந்தனை கொண்ட சில பேராசிரியர்களை கொண்டு 1948 வது ஆண்டு உருவாக்கப்பட்ட இயக்கம் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்.

1949 வது ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் நாள் அன்று இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மாணவர் இயக்கமாக பதிவு செய்யப்பட்டது.

கல்வித்துறை வளர்ச்சியின் மூலம் தேசிய மறுமலர்ச்சிக்காக பணியாற்றுவது என்று ABVP முடிவு செய்தது.

மாணவர்களிடையே உள்ள தனித்திறமைகளையும் அவர்களது ஆற்றல்களையும் முறைப்படுத்தி கல்வி வளர்ச்சி மற்றும் தேச முன்னேற்றத்திற்காக ABVP சிந்திக்க வைக்கிறது.

மாணவர்கள் என்றாலே இவர்கள் யாருக்கும் பயன்படாதவர்கள், பிரச்சனைக்குரியவர்கள் என்கின்ற தவறான கருத்தை மாற்றி மாணவர்கள் மாற்றத்திற்கு உரியவர்கள். இவர்கள் பயன்படாதவர்கள் அல்ல சரியாக பயன்படுத்தப்படாதவர்கள் என்றும் மாணவர் சக்தி தேசிய சக்தி என்று முழங்கும் இயக்கம் ABVP.

தனது கல்வி வளர்ச்சி மூலம் பாரத தேசம் வளர்ச்சி பெற வேண்டுமென்பதற்காக கற்றுக் கொடுக்கக்கூடிய ஆசிரியர்களை வணங்கி அவர்களோடு இணைந்து கல்விக் குடும்பமாக செயல்படும் இயக்கம் ABVP.

மாநிலம், மொழி, ஜாதி, மத வேறுபாடுகளை களைந்து இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு ஒரே மக்கள் என்கின்ற உயரிய சிந்தனையை கொண்ட இயக்கம் ABVP.

எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராது, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் உலகின் மிகப்பெரிய மாணவர் இயக்கம் ABVP.

எந்த ஒரு தனிமனிதனையும் முன்னிலைப்படுத்தாமல் தேசத்தை முன்னிலைப்படுத்தும் தேசிய மாணவர் இயக்கம் ABVP.

அறிவு ஒழுக்கம் ஒற்றுமை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு மாணவர்களிடையே ஆக்கபூர்வமான சிந்தனைகளை வளர்க்கும் இயக்கம் ABVP.

மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராட்டங்களை கூட முறையாக ஆக்கப்பூர்வமான முறையில் முன்னெடுக்கும் அமைப்பு ABVP.

இன்றைய மாணவன் நாளைய குடிமகன் என்பதை மாற்றி இன்றைய மாணவன் இன்றைய குடிமகன் என்பதை வலியுறுத்துவது ABVP.

கல்வி நிலையங்களில் மாணவர்களது தலைமைப்பண்பை வளர்த்திடவும் அவர்களது பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்திடவும் மாணவர் பேரவை தேர்தல்களில் அதிகமான வெற்றிகளை பெற்றுக் கொண்டிருப்பது ABVP.

கல்விப் பிரச்சினைகள் மட்டுமல்லது நாட்டில் ஏற்படும் பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியான பிரச்சனைகளாக இருந்தாலும் அவற்றிற்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் ABVP.

நாட்டில் எந்த மூலையிலும் எதிர்பாராத விதமாக நடைபெறும் இயற்கை சீற்றங்கள், விபத்துகளின் போது களத்தில் முதல் நபர்களாக இருந்து மீட்புப்பணி செய்வது ABVP மாணவர்களே…

1975இல் அவசர நிலையை எதிர்த்து போராடி வெற்றி கண்ட இயக்கம்,
பங்களாதேஷ் ஊடுருவலை கண்டித்து போராட்டங்கள்,
பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை மீறி ஶ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்ற 1990ல் 10,000ற்கும் மேற்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெற்று வரும் இயக்கம் ABVP.

சுதேசி சிந்தனை வளர கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சைக்கிள் பிரச்சார பயணம் நடத்திய இயக்கம் ABVP.

தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை குறித்து ஆய்வுகள் நடத்தி “தொட்டில் குழந்தை திட்டம்” உருவாக காரணமாக இருந்த இயக்கம் ABVP.

மதுவில்லா தமிழகம் உருவாகிட வேண்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உண்ணாவிரதங்கள் மாநிலம் முழுவதும் சைக்கிள் பேரணி நடத்திய இயக்கம் ABVP.

1999 முதல் பேராசிரியர் K.R. பரமசிவன் அவர்களது பெயரில் வாராந்திர இலவச மருத்துவ முகாமினை தொடர்ச்சியாக மதுரையில் நடத்தி வரும் இயக்கம் ABVP.

மாணவர்களின் உணர்வுகளை அவர்களது இதய குரலாக வெளிப்படுத்திட “மாணவர் சக்தி” மாத இதழினை 35 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வரும் இயக்கம் ABVP.

கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது பல்வேறு வகையான சேவைப்பணிகளை செய்த இயக்கம்.

சுதந்திரம் 75 ஆவது ஆண்டு என்பதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் “ஒரு கிராமம் ஒரு தேசியக் கொடி” தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய இயக்கம் ABVP. அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி அவர்களது தியாகத்தை போற்றும் இயக்கம் ABVP.

16க்கும் மேற்பட்ட பல துறை சார்ந்த மாணவர்களுக்கு அவர்களது துறை சார்ந்த நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், வாசகர் வட்டங்கள் நடத்திடும் இயக்கம் ABVP.

தங்களது மாணவப் பருவத்தில் ABVP யில் பயிற்சி பெற்றவர்கள் இன்று ஆன்மீகம் முதல் அரசியல் வரை அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.

எண்ணிலடங்காத வரலாற்றுப் பெருமையும் பாரம்பரியமும் மிக்க அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தனது 75 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

ABVP பதிவு செய்த தினமான ஜூலை 9 – ஐ நாடு முழுவதும் தேசிய மாணவர் தினமாக கொண்டாடி வருகிறது.

உலக அரங்கில் பாரத நாடு தலைசிறந்த நாடாக மாறி வரக்கூடிய இந்த அமிர்த காலகட்டத்தில் கல்வித்துறை வளர்ச்சியின் மூலம் பாரத தேசம் வளர்ச்சி பெற இணைந்து செயல்படுவோம். வெற்றி பெறுவோம்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திரு நாடு வந்தே மாதரம் வந்தே மாதரம்

மாணவர் சக்தி தேசிய சக்தி.

லி.முத்து ராமலிங்கம்,
மாநில அமைப்பாளர்,
ABVP தென் தமிழகம்.
7373530106.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here