ஈஸ்வர சந்திர வித்யாசாகர்

0
402

மேற்கு வங்க மாநிலம், மேட்னிபூர் அருகிலுள்ள பிர்சிங்கா எனும் ஊரில் தாகூர்தாஸ் பகவதி தேவி ஆகியோருக்கு செப்டம்பர் 26, 1820 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வாங்க முடியாது என்பதால் தெரு விளக்குக்கு கீழ் படித்தார். அவரது கல்வித் திறனுக்காக அவருக்கு பல உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. அவர் அனைத்து தேர்வுகளையும் சிறப்பாகவும் விரைவாகவும் தேர்ச்சி பெற்றார்.

1839ல் ஹிந்து சட்டக்குழு தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1841ல் ‘நியாயா’ மற்றும் ‘ஜியோதிஷ்’ தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற இவர், வேதங்களையும், சம்ஸ்கிருத இலக்கியங்களையும் ஆழ்ந்து கற்றார். 1841ல் சமஸ்கிருத இலக்கணம், இலக்கியம், வேதாந்தம், ஸ்மிருதி, வானியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். தனது பதினான்கு வயதில் தினமயி தேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1839ல் தனது சமஸ்கிருத சட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். இவருக்கு சமஸ்கிருதக் கல்லூரி ‘வித்யாசாகர்’ எனும் பட்டத்தை அளித்தது. 1841ல், தனது 21வது வயதில், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர், வில்லியம் கல்லூரியில் சமஸ்கிருதத் துறையின் தலைவராக சேர்ந்தார்.

முற்போக்கு தன்மை உடையவராக இருந்தார் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். பெண் கல்வி முன்னேற்றம், விதவைத் திருமணம் போன்ற சமூக மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிக நாட்டமுடையவர். பாரதத்தில் குறிப்பாக வங்காளத்தில் பெண்களின் நிலையை உயர்த்தினார். மாற்றுச் சங்கங்கள் அமைக்க முயன்ற சில சீர்திருத்தவாதிகள் போல இல்லாமல், அவர் சமூகத்தை உள்ளிருந்து மாற்ற முயன்றார்.

சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்டு அதன் காரணமாக தங்களில் வாழ்க்கையை விபசார தொழிலில் ஈடுபடுத்திய பெண்களின் நலனுக்காகவும் இளமையில் திருமணமாகி கணவரின் மறைவு காரணமாக இளம் வயதில் விதவையாகும் பெண்களின் மறுமணம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். பிராமாண சமூக மக்களில் பலர் விதவியனதும் தலையை மொட்டையடித்து வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலையினை கண்டு உள்ளம் வருந்தினார். இதற்கென வங்காளத்தில் பல புதிய சட்டங்களை உருவாக்க போராடினார் வித்யாசாகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here