இந்தியாவின் வளர்ச்சியின் இயந்திரம் இளைஞர்கள் -பிரதமர் மோடி

0
190

சென்னை, ஜூலை 29: அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவித்தார். நாடு மட்டுமின்றி உலக நாடுகளின் வளர்ச்சி எஞ்சின்கள் என்பதால், இந்திய இளைஞர்களை ஒட்டுமொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது என்றார்.

சென்னையில் அண்ணா பல்கலைகழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, அண்ணா பல்கலைகழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.உங்கள் மனதில் உங்களுக்கான எதிர்காலத்தை ஏற்கனவே உருவாக்கி இருப்பீர்கள்.எனவே இன்று சாதனைகளின் நாள் மட்டும் அல்ல அபிலாஷைகளின் நாளும் கூட”, என்றார்.

இளைஞர்களை இந்தியா மட்டும் அல்ல, “இந்தியாவின் இளைஞர்களை முழு உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. நீங்கள் இந்தியாவின் வளர்ச்சியின் இயந்திரம். மேலும் இந்தியா உலகின் வளர்ச்சியின் இயந்திரம்” என்று அவர் கூறினார்.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் தொடர்பை பிரதமர் நினைவு கூர்ந்தார். “அவரது எண்ணங்களும் மதிப்புகளும் உங்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கட்டும்” என்று பிரதமர் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here