அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP )
தேசிய மாணவர் அமைப்பு தொட்டியம் நகர கிளை சார்பாக 31/07/2022, ஞாயிற்றுக்கிழமை அப்பணநல்லூர் காமாட்சி அம்மன் ஆலய வளாகத்தில் ABVP நகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 30- க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் மாணவர் விஷ்வா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பயிற்சி முகாமில் ABVP அறிமுகம் மற்றும் சாதனை குறித்து மாநில மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஸ்ரீ. ரூபாராஜா அவர்கள் உரையாற்றினார். அமைப்பு ரீதியான செயல்பாடுகள் குறித்து உரை இருந்தது. பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியாக இந்த ஆண்டிற்கான தொட்டியம் நகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ABVP தொட்டியம் நகர தலைவராக திருமதி.சுகன்யா அவர்களும் நகர ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ. கோபி அவர்களும் மற்றும் நகர செயலாளராக ஸ்ரீ. விஷ்வா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.