பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

0
320

திருப்பூர்: ஜூலை 31. திருப்பூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு அனுப்பர்பாளையம் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் எம் பிரபு அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு தங்கராஜ் அவர்கள் வழிகாட்டுதலில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிதாக ஒன்றிய, வாரியப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட வேண்டுமென்றும் மூன்று மாத காலத்திற்குள் மோட்டார் சங்கம், கட்டுமான சங்கம், பனியன் சங்கம், தொழிலாளர் சங்கம் ஆகிய நான்கு சங்கங்களுக்கும் 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15, 75ஆவது சுதந்திர வைர விழாவை திருப்பூர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்டு 28-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்க வேண்டும் என்றும், செப்டம்பர் 17 விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய தொழிலாளர் தினத்தில் அனைத்து சங்கங்களும் திருப்பூரில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மேற்படி கூட்டத்தில் பங்குகொள்ள ஆலோசிக்கப்பட்டது திரு தங்கராஜ் அவர்கள் முன்னிலையில் லட்சுமி நாராயணன் அவர்கள் மாவட்ட பொருளாளர் ஆகவும் பனியன் சங்கத்தில் இணைச் செயலாளராக பிரபு விக்னேஷ் அவருக்கும் பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் மணிகண்டன், தலைவர் முருகானந்தம், செயலாளர் சண்முகம் மற்றும் தண்டபாணி பாலமுருகன், பிரபு, ஆறுமுகம் ,ஏ டி சீனிவாசன், மாதவன், லட்சுமி நாராயணன், உடுமலை சின்னதுரை, கிருஷ்ணகுமார், அசோக் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர் கூட்டத்தின் முடிவில் மாவட்ட செயல் தலைவர் செந்தில் நன்றியுரை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here