நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக எதிர்க்கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக அனைத்துக்கட்சி கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த தொடரில் 24 மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் இன்று பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய், 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வெளியேறும்படி, 81 சீனர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது என கூறினார். இந்த நோட்டீஸ் பெற்றவர்களின் இந்திய விசா ரத்து செய்யப்பட்டு விடும். இதனை தொடர்ந்து ராய் பேசும்போது, 117 பேர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டு உள்ளனர். விசா நடைமுறை விதிகளை மீறியதற்காக மற்றும் பிற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதற்காக 726 பேர் தீங்கு விளைவிப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர் என அவர் அவையில் கூறியுள்ளா