கடந்த 2018 -19 ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.42,499 கோடி மதிப்புக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.கடந்த 2021- 22 நிதியாண்டில் 12,815 கோடி ரூபாய்க்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.1,387 கோடி ஆக ஏற்றுமதி உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு மே மாதம், பாதுகாப்பு துறையில், ஆட்டோமெட்டிக் முறையில், வெளிநாட்டு அந்நிய முதலீட்டுக்கான உச்ச வரம்பை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.