பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம்: மாநில அரசுகளுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

0
188

நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு மத்திய – மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன; இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையில், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், சமீப காலமாக கர்நாடகாவில் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இதை மத்திய அரசு ஆராய்ந்து, சுதந்திர தின விழாவில் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை வாயிலாக எச்சரிக்கை விடுத்து உள்ளது.

குறிப்பாக, மங்களூரு, உடுப்பி, கார்வார், பட்கல், ஹுப்பள்ளி, பெலகாவி, ஷிவமொகா, சிக்கமகளூரு உட்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பை பலப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here