பாரதம் தனது சுயநலத்திற்காக வாழாமல் உலக நன்மைக்காக வாழ்கிறது _டாக்டர் மோகன் ஜி பகவத் .

0
230

போபாலில் நடைபெற்ற விஷ்வ சங்க சிக்ஷா விழாவில் சங்கத்தின் ஸர் ஸங்கசாலக் டாக்டர் மோகன் ஜி பகவத் பேசியதாவது பாரதம் தனது சுயநலத்திற்காக வாழாமல் உலக நன்மைக்காக வாழ்கிறது என்றார். இந்த நாட்டின் நோக்கம் இந்த நாட்டின் இறையாண்மையை உலக தர்மத்திற்காக வழங்குவதாகும்.
உலக நன்மையை விரும்பிய நமது முனிவர்களின் தவ வலிமையின் காரணமாக பிறந்தது தான் இந்த தேசம் .பாரதம் தனது சுயநலத்திற்காக வாழாமல் உலகத்திற்காக வாழ வேண்டும் என்று கூறினார் சாமி விவேகானந்தர் .பாரதப் பண்பாட்டால் தான் பெற்ற நற்சிந்தனைகளை ,
நற்பண்புகளை அங்கு வாழும் மக்களுக்கு வழங்குவது வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொறுப்பாகும் .
ஸனாதன தர்மத்தை உயர்த்துவது இறைவனின் விருப்பம் என்றும் சிறையில் வாசுதேவன் இந்த செய்தியை தான் நமக்கு அளித்து இருக்கிறார் என்றும் மகரிஷிஅரவிந்தர் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here