தேசியக் கொடி விற்பனை அஞ்சலகங்களில் இன்று முதல் துவக்கம்

0
285

நாட்டின் 75வது சுதந்திர தின விழா, நாடு முழுதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை, திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
‘இல்லந்தோறும் மூவர்ணம்’ எனும் பிரசாரத்தை, மத்திய அரசு துவங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுதும் தேசியக் கொடிகளை விற்கும் பணி, அஞ்சல் துறைக்கு வழங்கப் பட்டுள்ளது.
ஒரு தேசியக் கொடியின் விலை 25 ரூபாய். தேசிய கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
www.epostoffice.gov.in என்ற வலைதளத்திலும் ஆர்டர் செய்து, ஆன்லைன் வாயிலாகவும் வாங்கலாம் என, சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here