இந்திய தேசியக்கொடி கமிட்டி காங்கிரஸ் கமிட்டி மற்றும் சாதாரண மக்களிடம் சிறந்த தேசியக் கொடி அமைப்பதற்காக தங்களது கருத்தும் ஆலோசனையும் கேட்டது. எல்லோருடைய கருத்துக்களும் கேட்ட பின்பு கொடி கமிட்டி ஒன்றுபட்ட ஒரு முடிவை எடுத்தது.அதன்படி பாரதத்தின் தேசியக்கொடி மிகவும் சிறப்பு வாய்ந்ததும், கலை உணர்வும், பொதுவானதாகவும்,இருக்க வேண்டும்.
அது ஒரே நிறமாகவும் அந்த நிறம் எல்லாவற்றுக்கும் மேலானதும் மேன்மையானதும் எல்லா பாரத மக்களும் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சிறந்ததாகவும் இருக்க வேண்டும்.ஆகவே அது பகவத் த்ஜம் அதாவது காவி கொடியாகத்தான் இருக்க முடியும். அதன் நடுவில் நீல வடிவிலான சர்க்காவும் இருக்க வேண்டும் எனவும் கொடி செவ்வக வடிவில் இருக்க வேண்டும் என கொடி கமிட்டி முடிவு செய்தது .இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .ஆனால் இந்த முடிவை ஏன் ஏற்கப்படவில்லை? இது போன்ற ஒரு மனநிலை ஏன் ஏற்பட்டது? எவர்களா ல் பாரதத்தின் எதார்த்தமான மற்றும் சுய சிந்தனையுடன் உள்ள சுயம் ஏற்கப்படாமல் போனது ? இந்த விஷயம் குறித்து நாம் நன்கு சிந்தனை செய்ய வேண்டும்.