அரியலூரில் விதைத்திருவிழா கண்காட்சி

0
1546

அரியலூர் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் மற்றும் தமிழ் களம் சார்பில் விதைத்திருவிழா கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். இதில் விவசாயிகள் நாட்டு விதைகளை விட்டுவிட்டு வீரிய ரக விதைகளை பயன்படுத்துவதால் மனிதன் மட்டுமல்லாமல் கால்நடைகள் உட்கொள்ளும் உணவிலும் பல்வேறு ரசாயனம், பூச்சி மருந்துகள் கலந்துள்ளதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மண்ணின் தன்மை பாதிக்கப்பட்டு உயிரற்ற மண்ணாக மாறி வருகிறது. இதைத்தவிர்க்கும் வகையில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும். விதைக்காக பன்னாட்டு நிறுவனங்களை நாடுவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. விதை திருவிழாவில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here