புதுதில்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தில், தமிழக ஆசிரியர்கள் தயார் செய்து அனுப்பிய ‘சந்தாலி மொழியில் வாழ்த்துச் செய்தியும் திருக்குறளும் பொறிக்கப்பட்ட ராக்கி கயிறை’ மேதகு. இந்திய குடியரசுத் தலைவருக்கு அணிவிக்கிறார் நாட்டின் வட கிழக்கு பகுதியைச் சேர்ந்த மாணவர் தியா.
அருகில் பா.ஜ மூத்த தலைவரும், நாடு தழுவிய திருவள்ளுவர் மாணவர் இளைஞர் அமைப்பின் தலைவரும், தமிழ் ஆர்வலருமான உத்தரகாண்ட் தருண் விஜய்; கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை முதல்வர் டாக்டர். சொ.ராமசுப்பிரமணியன், மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர்.
தாய்த்திரு நாட்டின் 75வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா கொண்டாடப்படுவதையொட்டி நம் நாட்டின் முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முன்னதாக கரூர் பரணி கல்வி குழும ஆசிரியர்கள் தயார் செய்த 18 மொழிகளில் திருக்குறள் பொறிக்கப்பட்ட 75,000 ராக்கி கயிறுகள், மாணவர்கள் தயார் செய்த மற்ற 75,000 ராக்கி கயிறுகள் மொத்தம் ஒன்றரை லட்சம் ராக்கி கயிறுகள் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களிடம் கடந்த வாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெல்க பாரத அன்னை! ஜெய்ஹிந்த்!