சுதந்திரத்தின் அமுத விழா : ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம்

0
302

இன்று நாம் நமது 75 ஆவது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் நம் நாட்டின் அனைத்து குடிமக்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். நமது தேசம் அனேக அடக்குமுறைகளையும் துயரங்களையும் கடந்து 75 வருட  பயணத்தை இன்று கடந்துள்ளது.  இந்த பயணமானது நம்மை பல நேரத்தில் புளகாங்கிதம் அடையச் செய்து இருக்கிறது .  இன்று நமது தேச சுதந்திரத்தின் 75 வது வருடத்தின் இத்தருணத்தில் தேசம் பெற்ற படிப்பினைகள் சவால்கள் இவை அனைத்தும் நம் முன்னால் நிற்கின்றன.  ஒரு நாடு அல்லது ஒரு ராஷ்டிரம் சுதந்திரத்தின் போது தேச பிரிவினை என்ற சோதனையை எதிர்கொண்டதோ அந்த பிரிவினையின் போது பல்வேறு ஹிம்சைகளையும் தேசம் அனுபவிக்க வேண்டி இருந்தது.  இதைத் தொடர்ந்து தேசத்தின் எல்லைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நமது தேசம் எல்லா சவால்களையும் எதிர்கொண்டு அதில் தோல்வி அடையவில்லை.  நமது நாடு இந்த சவால்களை எல்லாம்  எதிர் கொண்ட
அதே நேரத்தில் மக்களாட்சியின் அடிப்படையையும் வலுப்படுத்தியது.  நமது தேசத்தின் மக்கள் பிரிவினையின் போதும் ஆக்கிரமிப்பின்  போதும் எவ்வளவு பெரிய துயரத்தை அனுபவித்து இருக்கிறார்கள் என்று நாம் இன்று கற்பனை செய்து பார்க்க முடிகிறது.1952 இல் மக்களாட்சி என்ற மிகப்பெரிய விழா ஏற்படுத்தப்பட்டு பாரதத்தில்  மக்களாட்சி அரசு நிறுவப்பட்டுள்ளது.

பாரத நாட்டு மக்களின் திறமையும் விருப்பமும் எதுவாக இருந்தது எனில் 1947 க்கு பிறகு தொடர்ந்து பாரதத்தை விட்டு பிரிந்து செல்லக்கூடிய சூழ்நிலையில் இருந்த கோவாவின் பகுதி தாதரா மட்டும் நகர் ஹவேலி ஹைதராபாத் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்கள் பாரதத்தோடு ஒன்றிணைப்பதற்கான முயற்சி தொடர்ந்தது.  இறுதியில் மக்களுடைய  ஒத்துழைப்பினாலும், லட்சியத்தினாலும் கிடைத்திருந்தது. தேசத்திற்கு அரசியல் சுதந்திரம் சில வருடங்களுக்கு முன்னால் கிடைத்திருந்தாலும் நாம் சீக்கிரம் செய்திருக்க முடியுமா என்ற கேள்வி நம்முள் அடிக்கடி எழுந்தது. இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் பாரத சமுதாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . பாரத சமுதாயம் எல்லா விதமான வன்முறைகளையும்,துயரங்களையும்,  சகித்துக் கொண்டு ஆனால் அதே நேரத்தில் ஒற்றுமை என்ற சூத்திரத்தை மறக்கவில்லை. பாரத சுதந்திரப் போராட்டத்தை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது நமது போராட்டத்தின் அடையாளம் நகரங்களிலும் கிராமங்களும் காடுகளையும் மலைகளும் என அனைத்து இடங்களிலும் நடந்ததை நாம் பார்க்க முடிகிறது . மக்களின் புரட்சிகளோ அல்லது தென் பகுதியில் வீரர்களின் சுதந்திரப் போராட்டங்களோ  எல்லாவற்றிலும் நாம் ஒரே விதமான போராட்ட குணங்களையும், எண்ணங்களையும், பார்க்க முடிகிறது.  எல்லா மக்களும் ஏதேனும் விலை கொடுத்து சுதந்திரத்தை விரும்பியிருந்தனர். சுதந்திரம் என்பது தனக்காக மட்டும் இல்லாமல் தன் சுயநலத்துக்காக மட்டும் இல்லாமல் முழு தேசத்திற்காகவும் சுதந்திரம் என்று மக்கள் மக்கள் விரும்பி இருந்தனர்.

சுந்திரப் போராட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட துயரமானது எல்லாவிதமான தியாகங்களிலும்  வழிகளிலும் செல்வதற்கான சுய விருப்பத்தோடு இருந்தது.  இந்த காரணத்தினால் தான் பாரதத்தினுடைய சுதந்திரத்திற்காக லண்டன் யூ எஸ் ஜப்பான் என பல இடங்களிலும்  முயற்சிகள் நடந்தன. லண்டனில் இருக்கக்கூடிய இந்தியா ஹவுஸ் பாரத சுதந்திரத்திற்கு ஒரு முக்கிய கேந்திரமாக அமைந்தது.

பாரத சுதந்திரப் போராட்டமானது மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது . பூகோள ரீதியாக பொருளாதார ரீதியாக சமுதாய ரீதியாக ஏற்பட்ட பிளவுகளுக்கு அப்பாற் பட்டு  பாரத மக்களுடைய  உள்ளங்களை ஒன்றிணைத்தது. இதில்  ஒரு தனி நபருடைய பெயரை எடுத்துக் கொள்வது பொருத்தமாய் இருக்காது ஏனென்றால் சுதந்திரப் போராட்டத்திற்காக அனேக மக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்தனர். இந்தப் போராட்டத்தின் சிலருடைய பெயர் நமக்குத் தெரிந்திருக்கலாம் பலருடைய பெயர் நமக்குத் தெரியாமலும் இருந்திருக்கலாம் இது ஒரு போராட்டம் இதற்கு எண்ணற்றவர்கள் நாயகர்களாக இருந்தனர்.  ஆனால் எல்லா நாயகர்களுக்கும் ஒருமித்த இலட்சியம் தான் இருந்தது.

இதனால் சுதந்திரத்துக்கு பிறகு தேசத்தை பரம வைபவ  நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய எண்ணம் பாரத மக்களிடம் இருந்தது. ஆனால் இதற்காக அரசியல் தலைமையை சார்ந்து இருக்க வில்லை. ஆனால் தேசத்தின் மக்களாட்சி தத்துவத்தில் ஏற்பட்ட எல்லை மீறலும் அவசர நிலையின்  போது  மக்கள் அதை  சமாளித்து எதிர்த்து போரிடவும் செய்தனர்.

இன்று நமக்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் கடந்த இந்த தருணத்தில் நாம் சிந்திக்க வேண்டியது யாதெனில் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவின் போது நம்முடைய லட்சியம் எதுவாக இருக்க வேண்டும் . இந்த உலகம் முழுவதும் கொரோனா மற்றும் நிலையற்ற தன்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் இச்சூழலில் ஒரு தேசம் என்ற முறையில் நம்முடைய லட்சியம் எதுவாக இருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக நமக்கு பல்வேறு விதமான வசதி வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. பாரத நாட்டு குடிமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளையும் பெருக்கிக் கொண்டுள்ளனர்.  சுகாதாரம் வசிப்பிடம் பொருளாதார சீர்திருத்தங்கள் இவை அனைத்தும் சரியான கோணத்தில் மக்களுக்கு கிடைத்தன் வாயிலாக திருப்திகரமாக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  இது பாரதத்தின் மேன்மையான சக்தியாகும். கொரோனா காலத்தில் மிக குறுகிய காலத்தில் மிகக் குறைந்த செலவில் மிகவும் பாதுகாப்பான தடுப்பூசி நாம் உற்பத்தி செய்து இருக்கிறோம். மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் உதவியும் செய்ததனால் கோடிக்கணக்கான மக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வளவு விஷயங்கள் செய்த பின்பும் கூட பாரத சமுதாயம் ஒரு தேசம் என்ற கண்ணோட்டத்தில்  பல உள்நாட்டு அல்லது வெளிநாட்டு துயரங்களை எதிர்கொள்வதுடன் உரிய தீர்வையும் நாம் காண வேண்டும்.   நாம் சமத்துவத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் ஏனென்றால் சமுதாயம் சமத்துவமாக இருந்தால் அது  வலிவுடையதாக இருக்கும். ஆகவே இதற்காக நாம் அதிகமாக வேலை செய்ய வேண்டியது தேவையா இருக்கிறது. இந்த பாரத நாட்டினுடைய பொருளாதாரம் மிகுந்த இடையூறுகளுக்கு பிறகு சற்று முன்னேறி இருக்கிறது. ஆனால் பாரதத்தினுடைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது இன்னும் வேகமாக நாம் வளர வேண்டி இருக்கிறது.  இதற்கு நாம் பாரத நாட்டு தொழில் முறைகளையும் பாரத நாட்டில் கிடைக்கக்கூடிய வளத்தையும் வலுப்படுத்த வேண்டும்.  நாம் அவ்வாறு செய்யவில்லை எனில் பாரதத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை முற்றிலும் நம்மால் ஒழித்து விட முடியாது. பாரதம் தன்னிறைவு அடைந்தால் தான் எல்லா கோணங்களும் வலுப்பெற்றதாக அமையும.

சுதந்திரம் கிடைத்த 75 வருடம் முடிவடைந்த இந்த தருணத்தில்  நாம் பாரத நாட்டில் நீதி நிலை நாட்டவும்,  பாரத மக்களின்  எதிர்பார்ப்புகளும் எண்ணங்களும் நிறைவேற்றப்படுகின்றதா  என நாம் சிந்திக்க வேண்டும்.   அவ்வாறு இல்லையெனில் அதில் நாம் எவ்விதமான மாற்றம் கொணர வேண்டும் என  நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியது தேவையாக இருக்கிறது . இன்று நாம் பரவலாக பார்க்கப்படுகிறது யாதெனில் ஒரு சாதாரண மனிதன் தன்னை திறமையற்றவனாகவும், இயல்பு சூழ்நிலை இல்லாதவனாகவும் காணப்படுகிறான் . நீதியோ அல்லது அரசியல் விஷயங்களோ எதுவானாலும் சாதாரண மனிதனுக்கு இயல்பாகவும் சுலபமாகவும் கிடைக்க வேண்டும் இது குறித்து  நாம் சிந்தனை செய்ய வேண்டியது அவசியம் இருக்கிறது.

இன்று பாரதம் உலகத்தின் சவால்களை எல்லாம் எப்போது எதிர்கொள்ள முடியுமென்றால் நம்முடைய  உள்நாட்டுக் கட்டமைப்பு பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பு என்பது பொருளாதாரம்  மற்றும் சமூகம் பலம் பொருந்தியதாக அமைய வேண்டும்.  நாட்டின் உள்கட்டமைப்பு வலுவான பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்படக்கூடிய அனைத்து சவால்களையும் தீர்வு காணக்கூடியதாக அமைய வேண்டும்.

தத்தாத்ரேய ஹோஸ்பாலே
சர் கார்யவாஹ
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here