புது தில்லி 17ஆகஸ்ட் 2022 விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மத்திய செயல் தலைவரும் மூத்த பொறுப்பாளரும் ஆகிய ஸ்ரீ அலோக் குமார் பேசுகையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை மந்திரி திரு.ஹர்தீப் புரி அவர்கள் உரையை பார்த்து நாம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானோம். ஸ்ரீ ஹர்தீப் புரி அவர்கள் ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாக வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு தில்லி பக்கர் லாலா வின் ஈ டபிள்யு எஸ் அடுக்கு மாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்வது குறித்து பேசி இருக்கிறார்.
ஸ்ரீ பூரி அவர்களுக்கு
மத்திய உள்துறை மந்திரி திரு.அமித்ஷா அவர்களுடைய உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். 10 டிசம்பர் 2020 பாராளுமன்றத்தில் ரோஹிங்கியாக்களை ஒருபொழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்ற திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்என ஸ்ரீ அலோக் குமார் தெரிவித்தார்.
ரோஹிங்கியாக்கள் அடைக்கலமாக வந்தவர்கள் அல்ல என்றும் எல்லை மீறி நுழைந்தவர்கள் என்றும் பாரத அரசாங்கம் தெளிவுபடுத்த இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக பாரத அரசு உறுதியளித்திருக்கிறது.
பாகிஸ்தானில் இருந்து அடைக்கலமாக வந்த ஹிந்துக்கள் தில்லியின் கடினமான தெருக்களில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை என தெரிவித்தார்.
ஆனால் ரோஹிங்கியாகளுக்கு இடம் அளிப்பது என்ற தீர்மானம் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
இந்த தீர்மானத்தை மறுபரிசோதனை செய்யவும் ரோஹிங்கியாக்களுக்கு பாரதத்தில் இடம் அளிப்பதற்கு பதிலாக அவர்களை பாரதத்திலிருந்து திருப்பி அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பாரத அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுகிறோம்.வினோத் பன்சல் தேசிய பொறுப்பாளர் விஸ்வ ஹிந்து பரிஷத் புதுடெல்லி.