17 ஆகஸ்ட் 1909.பிறப்பு 1883 பெப்ரவரி 18. இளங்கன்று பயமறியாது என்பதற்கு உதாரணம் மதன்லால் திங்கரா. நல்ல செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த மதன்லால் திங்கரா மேல் படிப்பிற்காக லண்டன் சென்றார். அப்போது அவருக்கு வீரசாவர்க்கர், வ.வே.சு. ஐயர் ஆகியோரின் தொடர்பு ஏற்பட்டது.
படிக்கச் சென்றவன் தேச விடுதலைக் காக எதையும் செய்யத் தயாரானான். வங்கப் பிரிவினைக்குக் காரணமான வில்லியம் ஹட் கர்சன் வில்லியினை சுட்டுக் கொன்றான்.
இக்கொலைக்காக தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. சிறுவனாக இருக்கிறாய் மன்னிப்புக் கேள் தண்டனையை குறைக் கிறோம் என்று நீதிபதி சொன்னதை ஒதுக்கித் தள்ளியவன் திங்கரா.
விரைவில் தூக்கில் இடுங்கள். மீண்டும் பிறவி எடுத்து வந்து தாய்நாடிற்கு சேவை செய்யவேண்டும் என்று வீர கர்ஜனை செய்தவன்.
தூக்கில் போடும் நாளன்று நன்கு அலங் கரித்துக் கொண்டு தூக்கு மேடைக்குச் சிரித்துக் கொண்டே சென்றவன். வந்தே மாதரம் என்று முழக்கமிட்டவாரே தூக்குக் கயிரில் தன் உயிரை பாரதத் தாயின் மடியில் சமர்ப்பணம் செய்தவன்.
அவனுடைய தந்தை அந்நிய மோகத்தில் மூழ்கியவர். ஆதலால் மதன்லால் தன்னுடைய மகன் அல்ல என்று நாளிதழ்களில் விளம்பரம் செய்தார். அவனுடைய பூத உடலைக் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
மதன்லால் போன்று இளம் வயதில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த பலர் இருந்துள்ளனர். அவர்களின் தியாக வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
26 வயதே வாழ்ந்த வீரனின் நினைவு நாள் இன்று. அவனது தியாகத்தை நினைவில் வைத்திருப்போம்.