பழமைவாய்ந்த மொழி தமிழ்

0
89

 

‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற திட்டத்தின் கீழ் தமிழகம் வந்த 45 பீகார் மாநில மாணவர்களுடன் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார். அப்போது அவர், “பாரதம் என்பது 1947ம் ஆண்டு உருவாக்கப்படவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே அது உருவானது. பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது. பொதுவாக, பழமையான மொழிகளாக தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தைக் கூறுவார்கள். ஆனால் அதற்கு தற்போது வரை முடிவு கிடைக்கவில்லை. தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கும், சமஸ்கிருதத்தில் இருந்தும் தமிழுக்கும் பல சொற்கள் வந்துள்ளன. அரசர்கள் ஆண்ட அந்த காலம் முதல் யார் வேண்டுமென்றாலும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற சூழல் இருந்தது. மிகவும் பழமைவாய்ந்த மொழி தமிழ். தமிழகம், மிகவும் பழமையான மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டது. பன்மொழி இருப்பது நமது பாரதத்திற்கு அழகு. பக்தி இயக்கம் தமிழக மண்ணில் தான் தொடங்கியது. கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடுகளால் மிகவும் பழமையான நாடு பாரதம்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here