புக்க ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் தாடிபத்ரியில் பெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.
இது 1490 மற்றும் 1509 க்கு இடையில் விஜயநகரப் பேரரசின் ஆட்சியின் போது குட்டி-கண்டிகோட்டா பகுதியின் பெம்மாசானி நாயக்க தலைவரான பெம்மாசானி ராமலிங்க நாயுடு I என்பவரால் கட்டப்பட்டது.
கோயிலில் விஷ்ணு சன்னதிக்கு முன்னால் ஏழு சிறிய தனித்தனி தூண்கள் உள்ளன, மேலும் அதைத் தட்டும் போது அவை ‘சப்தஸ்வர’ (ஏழு இசைக் குறிப்புகள்) உருவாக்குகின்றன.
கோயிலின் கோபுரங்கள் முழுமையடையாமல் உள்ளன. கட்டிடக்கலை வரலாற்றாசிரியர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இதை ‘அற்புதங்கள்’ என்று விவரிக்கிறார்.