இந்தியாவில் பயங்கரவாதிகள் பல்வேறு நாச வேலைகளை செய்ய திட்டமிடுவதால் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் தலைமை உயர்பதவி வகிக்கும் முக்கிய நபருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் பயங்கரவாத குழுவை சேர்ந்த ஒரு பயங்கரவாதியை ரஷ்ய அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
கைதான பயங்கரவாதி, இந்தியாவின் ஆளுங்கட்சியை சேர்ந்த முக்கிய நபருக்கு எதிராக தற்கொலைப்படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது என ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (எப்.எஸ்.பி) தெரிவித்துள்ளது. அந்த நபர் துருக்கியில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத குழுவின் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட நபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.