பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக், ”இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும்,” என உறுதியளித்தார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதையடுத்து, கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டுக்கும் இடையே, நாம் பாலமாக இருந்து வருகின்றோம். இந்தியாவில் நம் பொருட்களை விற்பதற்கு, மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதை நாம் அறிவோம்.இரு நாட்டு உறவில் புதிய மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன். இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். இதனால், நம் மாணவர்கள், நம்முடைய நிறுவனங்கள் இந்தியாவுக்கு செல்வதை சுலபமாக்குவேன். ஒரு வழிப் பாதையாக உள்ள உறவை, இரு வழிப் பாதையாக மாற்றுவேன். என்று கூறினார்.